செய்திகள்

நடிகர் விஜயகாந்தின் சுவாரஸ்யமான தகவல்கள்…!(Actor Vijayakanth Interesting information)

நடிகர் விஜய்காந்த் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் மகன் சண்முகபாண்டியன். அதில், அப்பா தீவிர உழைப்பாளி. அவர் காலை 6 மணிக்கு ஸ்பார்ட்டில் இருக்க வேண்டுமானால், 5.30 மணிக்கெல்லாம் போய்விடுவார். அரசியலுக்கு வருவதற்கு முன் முழுநேர சினிமாவில் தீவிரமாக இருந்தார்.

வீட்டில் இருக்கமாட்டார். வீட்டிற்கு வந்தால் முதலில் எங்கள் இருவரையும் அழைத்து விளையாடுவார். ஷூட்டிங்கில் இப்படி தான் சண்டை போட்டேன் என்று எங்களை நிற்க வைத்து நடித்து காட்டுவார். ஜாலியா விளையாடுவார்.

எங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை ஒதுக்குவாரோ இரு நாய்களை வளர்த்தார். அந்த நாய்களிடம் சென்று அவர்களுடன் பேசி, அரை மணி நேரம் விளையாடுவார். வாக்கிங் அழைத்துச் செல்வார். அதற்கு அப்புறம் தான் இயல்பு நிலைக்கு வருவார்.

அப்பா கால்களில் நிறைய கட்டு இருக்கும். சண்டை காட்சியில் எரியும் செங்கலை உடைத்து செல்ல வேண்டும். அதில் காலில் சரியான காயம் ஏற்பட்டது. இன்னொரு படத்தில் டம்மி ஹன் வைத்து சுடும் காட்சி.

சுடுபவர், சோதனையாக துப்பாக்கியை அழுத்த, அப்பாவின் கண் கீழ் புருவத்தில் அது துளைத்தது. இப்போதும் அந்த இடத்தில் அப்பாவுக்கு எலும்பு இருக்காது என தெரிவித்துள்ளார்.

Actor vijayakanth

Similar Posts