நடிகர் விஜயின் செல்லப்பெயர், பிடித்த சாப்பாடு..விஜயின் அம்மா..!(Actor Vijay’s nickname, favorite food..Vijay’s mother)
விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அப்போது அவர் விஜய்க்கு போன் செய்து, உனக்கு சர்க்கரை பொங்கல் செய்து எடுத்துவரேன் என கூறினார். மேலும் விஜய்யை ஜோ என செல்லமாக அழைத்தார் ஷோபா சந்திரசேகர். இந்நிலையில் விஜய்யின் செல்லப்பெயர் ஜோ என்றும்,
அவருக்கு சர்க்கரை பொங்கல் மிகவும் பிடிக்கும் என்றும் அவரது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. தற்போது இந்த தகவலை இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
