ரோலக்ஸ் சூர்யாவின் இடத்தில் நடிகர் விக்ரம்..!(Actor Vikram replaces Rolex Surya)
நடிகர் கமலின் நடிப்பில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா.
ஆனால், முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சியான் விக்ரம் தான் நடிப்பதாக இருந்ததாம். இந்நிலையில் ‘விக்ரம் 2’ படத்தில் சீயான் விக்ரம் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
‘விக்ரம் 2’ படத்தில் சீயான் விக்ரம் ரோலக்ஸ் மாதிரி நடிக்கிறாரா இல்லையென்றால், வேறு மாதிரியான ஹீரோ கதாப்பாத்திரமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
