நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ திரை விமர்சனம் (Actor Vikram’s ‘Cobra’ movie review)

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்கரம் நடிப்பில் கோப்ரா படம் எப்படி இருக்கு வாங்க பாக்கலாம்
படக்குழு
இயக்கம்:
ஆர்.அஜய் ஞானமுத்து
தயாரிப்பு:
எஸ்.எஸ்.லலித் குமார்
வெளியீடு:
ரெட் ஜெயண்ட்
முக்கிய கதாபாத்திரங்கள்:
விக்ரம்
ஸ்ரீநிதி ஷெட்டி
இர்பான் பதான்
கே.எஸ்.ரவிக்குமார்
ரோஷன் மேத்யூ
இசை:
ஏ.ஆர்.ரஹ்மான்
படத்தின் கதை
படத்தின் ஆரம்பத்தில் பல வெளிநாடுகளின் இடத்தை காட்டுகிறார்கள். அதில் ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை கொள்ள ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் கதாநாயகன் விக்ரம் வருகிறார். பின் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக இர்பான் பதான் வருகிறார். அந்த இளவரசர் கொலை மாதிரியே இந்தியாவில் ஒரிசா இளவரசர் ஒருவர் கொல்லப்படுகிறார். மேலும், இரண்டிலுமே ஒற்றுமை இருக்கிறது என்ற கல்லூரி மாணவி மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு ஆராய்ச்சி செய்கிறார்.அதை கட்டுரையாக எழுதுகிறார். இதைப் பற்றி அறிந்த இர்பான் பதான் இந்தியா வருகிறார். அப்படியே கட் பண்ணா சாதாரண கணக்கு வாத்தியாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மதியழகனை (விக்ரம்) கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி துரத்தி துரத்திக் காதலிக்கிறார். கணக்கு வாத்தியார் ஏன் இதுபோன்ற பெரிய கொலைகளை செய்கிறார் அதற்குப் பிறகு அடுத்தடுத்து நடக்கும் சில கொலை சம்பவங்களை விக்ரம் செய்கிறார். செய்யும் கொலைகளுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியான ரோஷன் மாத்தி இருக்கிறார்.

இந்த சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா? விக்ரம் அவரிடம் இருந்து தப்பித்தாரா? விக்ரம் இந்த கொலை செய்வதற்கான காரணங்கள் என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தின் சிறப்பு
விக்ரமின் நடிப்பு அசத்தல். மேக்கிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். சண்டை காட்சி ஹாலிவுட் படங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறது. நடிகர்கள் தங்களுக்கு கண்முன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
சியான் விக்ரம் எந்தவொரு கெட்டப் போட்டாலும் அதில் பர்ஃபெக்ட்டாக நடித்து ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் காஸ்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் சொதப்பல்கள்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். இயக்குனர் கதைக்களத்தில் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
மதிப்பீடு: 2.75/5
படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்!
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.