செய்திகள்

எனக்கு மாரடைப்பெல்லாம் இல்லை என நடிகர் விமல்..!(Actor Vimal said that I did not have a heart attack)

நடிகர் விமலுக்கு திடீர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்,

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனால் அதிகமானவர்கள் விமலை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தனர். இதுகுறித்து விமல் கூறும்போது, “எனக்கு மாரடைப்பு தகவல் உண்மை இல்லை. யாரோ இந்த தவறான தகவலை கிளப்பி விட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு எனக்கு லேசான இருமல் ஏற்பட்டது. அதனால் தான் வைத்தியசாலை சென்றேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன்” என்றார்.

Actor Vimal

Similar Posts