வாரிசு மற்றும் துணிவு மோதலால் ட்வீட் வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்..!(Actor Vishnu Vishal posted a tweet due to the conflict between Varisu and thunivu)
‘வாரிசு’ படம் கடந்த 7 நாட்களில் மட்டுமே 210 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
‘துணிவு’ படம் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை வைத்து சோஷியல் மீடியாவில் பல விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த சண்டைகள் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் அதிரடியான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், படங்களை படமாக பாருங்கள். உங்களுடைய ஹீரோக்களை கொண்டாடுங்கள். உடனடியாக இந்த சண்டைகளை நிறுத்துங்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
