நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட மனைவி..!(Actor Vishnu Vishal’s wife published nude photos)
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் விஷ்ணு.
இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த ஆண்டு டிரெண்டான நிலையில், உடனடியாக நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க செய்தது.
இதற்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் குறித்து ‘கட்டா குஸ்தி’ புரோமோஷனில் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த போட்டோவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்தேன். ஆனால், வெளியிட விரும்பவில்லை.
ரன்வீர் சிங் போட்டோ டிரெண்டான நிலையில், பொண்ணுங்க போடுறாங்க, ரன்வீர் சிங் போடுறாரு..
நீ போட்டா என்ன என சொல்லி என் மனைவி ஜுவாலா கட்டா தான் அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் லீக் பண்ணிட்டா என விளக்கம் கொடுத்துள்ளார்.
