சின்னத்திரை

கர்ப்பமானதும் கழட்டிவிட்ட நடிகர், கதறிய சீரியல் நடிகை..!(Actor who leave after getting pregnant, Serial actress who cried)

 நடிகை திவ்யா  சன் டிவியில் ஒளிபரப்பான ’கேளடி கண்மணி’ என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்தவர். ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் அர்னவ் என்பவரை காதலித்தார்.

இதன் பின்னர் நடிகை திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி அர்னவ்வை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அர்னவ்-க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக திவ்யாவுக்கு தெரிய வந்ததை அடுத்து அர்னவ்- திவ்யா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவை அவரது கணவர் அர்னவ் அடித்து உதைத்து உள்ளதாக தெரிகிறது.  

இதனையடுத்து காயமடைந்த திவ்யா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து கொண்டு அவர் கதறி அழுதவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ’என் கணவர் என்னை அடித்து உதைத்ததால் எனக்கு வயிற்றில் அடிபட்டு விட்டது என்றும் அவர் என்னை காலால் மிதித்தார் என்றும் அதன் பின்னர் நான் மயங்கி விழுந்து விட்டேன் என்றும் சிறிது நேரம் கழித்து நான் முழித்து பார்த்த போது எனக்கு வயிறு வலி அதிகமாக இருந்தது என்றும் அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.  

இது குறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Serial actress
Serial actress

Similar Posts