செய்திகள்

நடிகர்கள் நரேஷ்-பவித்ரா திருமணம் உண்மையான நிகழ்வா | Actors Naresh-Pavitra marriage is a real event

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பவித்ரா லோகேஷ் கடந்த 2007-ஆம் ஆண்டு சுரேந்தர் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார்.

Actors Naresh-Pavitra marriage is a real event

தற்போது 44 வயதாகும் பவித்ரா லோகேஷும் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபுவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதுமட்டுமல்லாது கடந்த சில மாதங்களாக இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தனர். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.

Actors Naresh-Pavitra marriage is a real event

அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக புத்தாண்டன்று பவித்ராவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தபடி வீடியோ வெளியிட்டு தாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதை உறுதிப்படுத்தி இருந்தார் நரேஷ்.

இந்நிலையில் நரேஷ் பாபுவுக்கும், பவித்ரா லோகேஷுக்கும் திருமணம் முடிந்தது. தங்களுக்கு திருமணம் ஆன வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நரேஷ் பாபு, “எங்களின் இந்த புதிய பயணத்தில் வாழ்நாள் முழுவதும் உங்களது ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நடிகர்கள் நரேஷ்-பவித்ரா திருமண வீடியோ! இருப்பினும், நெட்டிசன்களில் சில பிரிவினர் இது அவர்களின் வரவிருக்கும் திரைப்படத்திற்கான விளம்பர ஸ்டண்ட் என்று நம்புகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இது ஒரு உண்மையான திருமணம் அல்லது ஒரு விளம்பர வித்தையா?

Similar Posts