திரை உலாவின் தேடலில் இன்றய திரைப் பிரபலம் – நடிகை ஆத்மிகா (Actress Aathmika)

மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து மீசைய முறுக்குக்கு திரைப்படம் மூலம் தன்னை திரையுலகில் அறிமுகம் செய்து கொண்டார் நடிகை ஆத்மிகா. தற்போது நடிகை ஆத்மிகா ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தமிழ் திரையுலகில் பணிபுரியும் மாடல் ஆவார்.
நடிகையாவதற்கு முன்பு

1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பெற்றோர்களான பானுச்சந்திரன் மற்றும் நளினிக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு மோனிஷ் ரமேஷ் என்ற சகோதரர் உள்ளார். ஆத்மிகா தனது பள்ளிக் கல்வியை கோயம்புத்தூரில் முடித்தார், மேலும் M.O.P பட்டப்படிப்பை முடிக்க சென்னைக்கு சென்றார். வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, சென்னை. மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

குறும்படங்களில்
சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். ஆத்மிகா பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார் மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ராஜீவ் மேனன் இயக்கிய மேஜிக் மற்றும் மேஜிக் 2 போன்ற இரண்டு குறும்படங்களில் நடித்ததன் மூலம் ஆத்மிகா தனது நடிப்பைத் தொடங்கினார். அவர் சில குறும்படங்களின் ஒரு பகுதியாக இருந்த கல்லூரியில் நடிப்பதில் அவரது ஆர்வம் தொடங்கியது மற்றும் இரண்டு மாடலிங் பணிகளைச் செய்தார். அவர் பின்னர் திரைப்படத் துறையில் நுழைந்தார்.
திரை அறிமுகம்

அவரது நடிப்பிற்காக ஹிப்ஹாப் தமிழாவின் ஆதி அவர் ஆன்லைனில் அவரது சுயவிவரத்தைக் கண்டறிந்து மீசைய முறுக்கு திரைப்படத்தில் அவருக்கு முக்கியப் பாத்திரத்தை வழங்கினார். 2017 இல் அவரது முதல் படமான மீசைய முறுக்குக்குப் பிறகு அவரது சிறந்த நடிப்புத் திறமைக்காக பார்வையாளர்களால் பாராட்டப்பட்டார். இது ஆதியின் வாழ்க்கையை குறித்த படமாகும். அதில் ஆத்மிகா கல்லூரியில் படிக்கும் மாணவி மற்றும் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். அதுமட்டுமன்றி இதுவே ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமாகிய படமும் ஆகும். பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்-ஹிட் ஆனது, உலகளவில் ₹15 கோடிகளை வசூலித்தது, இந்த படத்தில் 17 அறிமுக நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் நடித்ததற்காக ஆத்மிகா நல்ல வரவேற்பையும் பெற்றார்.
ஆதியின் படத்திற்கு பின் கார்த்திக் நரேன் இயக்கிய தனது இரண்டாவது படமான நரகாசூரனில் 2017 இல் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதே ஆண்டில் அவர் OPPO சென்னை டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் 2017 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தெரிவு செய்யும் தலைவியாகவும் கலந்துக் கொண்டார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டில், காட்டேரியில் ஓவியாவிற்குப் பதிலாக ஆத்மிகா மூன்று பெண் முக்கிய வேடங்களில் நடித்துக்கொண்டே பிப்ரவரி 2019 இல், அவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மு. மாறனின் கண்ணை நம்பாதே மற்றும் செப்டம்பர் 2020 இல், ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய கோடியில் ஒருவன் படத்தின் படப்பிடிப்பையும் ஆத்மிகா தொடங்கினார்.
விஜய் ஆண்டனியுடன்
ஆனால் அவரது முந்தைய படங்களின் வெளியீடு தாமதமானதால் அவரது இரண்டாவது வெளியீடாக கோடியில் ஒருவன் 2021 இல் வெளியிடப்பட்டது. ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்த படமாகும். வேதாவதியாக ஆத்மிகா நடித்திருப்பார். ஆனால் பெரிதாக இந்த படம் வெற்றி பெறவில்லை. நடிகையின் நடிப்பு பாராட்டப்பட்டது.

பேய் படத்தில்
அதன் பின் அவர் நடித்த காட்டேரி திரைப்படம் 2022ல் வெளியானது. டீகே எழுதி இயக்கிய நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாகும்.இப்படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோருடன் ஆத்மிகா நடித்தார். இத்திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது சிறப்பாகும். புதையலைத் தேடுவதற்காக வெறிச்சோடிய கிராமத்திற்குச் செல்லும் ஒரு குழு பேய்களால் சந்திக்கும் பிரச்சனைகளே படமாகும். வரலட்சுமி பேயாக நடிக்க ஆத்மிகா தெரபி டாக்டராக தொழிலதிபரின் மகளாக நடிப்பார். பாக்ஸ் ஆபிசில் இந்தப்படம் ஒரு வெடிகுண்டே. ஆத்மிகா அவரது நடிப்பை பொருத்தமாக கொடுத்திருந்தார்.

வரவிலுள்ள படங்கள்

அவர் ஒப்பந்தமாகிய இரு படங்கள் இன்னும் வருகைக்கு காத்திருக்கின்றன. மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ஆத்மிகா நடித்துள்ளார். கண்ணை நம்பாதே 2023 மாசி மாதம் வரவுள்ளது.
அதனை தொடர்ந்து அவர் இரண்டாவதாக ஒப்பந்தமாகிய நரகாசூரன் படமும் வெளியாகவுள்ளது. கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய படத்தில் அரவிந்த் சுவாமி, ஷ்ரியா சரண், சுந்தீப் கிஷன் ஆகியோருடன் தரினி என்ற பாத்திரத்தில் ஆத்மிகா நடித்துள்ளார். பல்வேறு நிதி நெருக்கடிகளால் படம் வெளிவராமல் இருக்கிறது. ஆனால் விரைவில் வெளிவிடப்படும்.

நடிகை ஆத்மிகா தனது வாழ்வில் சிறக்கவும் தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.