பிக்பாஸ் சேனலை வெளுத்து வாங்கிய நடிகை அபிநய ஸ்ரீ..!(Actress Abhinayashree shocking complaint Bigg Boss channel)
பிக் பாஸ் 6ம் சீசன் தெலுங்கில் ஏற்கனவே தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது.
அதில் போட்டியாளராக பட நடிகை அபிநய ஸ்ரீ கலந்துகொண்டிருந்தார். அவர் போன வேகத்திலேயே வெளியேறிய நிலையில் தன்னை நிகழ்ச்சியில் காட்டவே இல்லை என புகார் கூறி இருக்கிறார். அம்மாவே சேனலுக்கு போன் செய்து கேட்டாராம்.
நாமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் தான் safe zoneல் தான் இருந்ததாகவும், ரசிகர்கள் ஓட்டு அடிப்படையில் தான் எலிமினேஷன் என பொய்யாக சொல்கிறார்கள்.
தமிழில் கமல்ஹாசன் எல்லா போட்டியாளர்களிடமும் பேசுகிறார். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை, வேண்டியவர்களிடம் மட்டும் பேசுகிறார்கள் என அபிநயஸ்ரீ குற்றம் சாட்டி இருக்கிறார்.
