நடிகை அபிராமி தனது குழந்தையுடன் போட்ட முதல் பதிவு | Actress Abhirami’s first post with her baby.
நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் விருமாண்டி திரைப்படத்தில் அபிராமி அண்ணலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அபிராமி மலையாள எழுத்தாளரான பாவனனின் பேரன் ராகுலை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அதன் பின்னர் சினிமாவில் தலைகட்டாமல் இருந்த அபிராமியை, கமல் விஸ்வரூபம் படத்தில் டப்பிங் பேசுவதற்காக அழைத்தார். அதன்பின் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அபிராமி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அபிராமி அன்னையர் தினத்தை முன்னிட்டு கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

40 வயதாகும் அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்களாம். கடந்த வருடம் மகளை தத்தெடுத்ததாகவும் அவள் அனைத்து வகையிலும் எங்கள் வாழ்க்கையை மாற்றி இருக்கிறாள் என்றும் அவருக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.
