செய்திகள்

வைத்தியசாலையில் மோசமான நிலையில் நடிகை ஐந்த்ரிலா சர்மா..!(Actress Aindrila Sharma is in a bad condition in the hospital)

நடிகை ஜந்த்ரிலா சர்மா ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது அவரது மூளையில் பல கட்டிகள் இருப்பதாகவும் இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது கோமாவில் உள்ள அவரை தொடர்ந்து வென்டிலேட்டரில் வைத்து கண்காணித்து வருகின்றனர் வைத்தியர்கள்.

இது ரசிகர்களை மட்டுமன்றி பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் விரைவில் குணமடைய திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை மற்றும் ஆருதல் கூறி வருகின்றனர்.

Actress Aindrila Sharma

Similar Posts