மாஸ்டர் பட நடிகருடன் காதலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!(Actress Aishwarya Lekshmi in love with Master film actor)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைதி, மாஸ்டர் திரைப்படங்களின் மூலம் மிரட்டிய நடிகர் அர்ஜுன் தாசுடன் இணைந்து இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு அதற்கு கீழ் ஒரு ஹார்ட்டையும் போட்டுள்ளார்.

இதை பார்த்த பலரும் லவ்வா என்று அவரிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஜோடியின் போட்டோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ஏதாவது திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ஜோடிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.