10 நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் ஐஸ்வர்யா ராய் மீது நடவடிக்கை..!(Actress Aishwarya Rai,If the tax is not paid within 10 days, action will be taken against)
பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அவருக்கு மராட்டிய மாநில நில வருவாய் துறை நோட்டீஸ் ஒன்று அனுப்பி உள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது.
இதற்கு ஓராண்டாக நில வரி ரூ.21 ஆயிரத்து 960 செலுத்தவில்லை என்றும், பல தடவை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரியை செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு சின்னார் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
10 நாட்களுக்குள் நில வரியை செலுத்தாவிட்டால் ஐஸ்வர்யா ராய் மீது நில வருவாய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
