செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.| Actress Aishwarya Rajesh has put an end to rumors.

ராஷ்மிகா, புஷ்பா படத்தில் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், மிகவும் சிறப்பாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்க்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

Actress Aishwarya Rajesh has put an end to rumors.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய கறுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவர் கொண்டாவுடன் நான் நடித்த ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் வெற்றி பெறாதது தனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், அதே தெலுங்கில் நல்ல கதை அமைந்தால் நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் புஷ்பா படத்தில், ராஷ்மிகா நடித்திருந்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இந்த காதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன் என பேசியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Actress Aishwarya Rajesh has put an end to rumors.

இந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்
அதாவது அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அன்பிற்குரிய நண்பர்களே… நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்பிற்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதரவிற்கும் முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.என் மீதும், என் பணியின் மீதும், அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்தத் தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும், பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அண்மையில் நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.

Actress Aishwarya Rajesh has put an end to rumors.

இருப்பினும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் உண்டு என்பதையும், திரையுலகை சார்ந்த சக நடிகர்கள், நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் புரிதலுக்கு நன்றி என்றும் அன்புடன் ஐஸ்வர்யா ராஜேஷ் என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar Posts