திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை ஆண்ட்ரியா..!(Actress Andrea opened up about marriage)
திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஆண்ட்ரியா சில நடிகைகளுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘மாஸ்டர்’, ‘வட்டம்’ மற்றும் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக பிசாசு 2, நோ என்ட்ரி, மல்லிகை, கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் பற்றி “ஒரு 20 வயதுக்கு மேல் இருந்து 30 வயதுக்குள் ஐய்யயோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே, யாரையும் சந்திக்கவில்லையே என்ற நெருக்கடி எனக்கும் இருந்தது. நான் இப்போது அதை தாண்டி வந்து விட்டேன். நிறைய பேர் வந்து கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சந்தோசமாக இல்லை.
அதே போல, நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை வரும் என்று எனக்கு தெரியாது. ஆனால்; எதுவாக இருந்தாலும் என்னுடைய சந்தோசத்திற்கு நான் தான் பொறுப்பு. அது தான் மிக முக்கியம்.” என ஆண்ட்ரியா கூறினார்.
