செய்திகள்

ஜெய்யுடனான காதல் குறித்து நடிகை அஞ்சலி..!(Actress Anjali about love with Jai)

ஜெய் மற்றும் அஞ்சலி காதல் செய்வதாகவும் பின் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்தார்கள்.

தற்போது அஞ்சலி Fall என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சலியிடம் ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை வீணானதா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் எழுதுபவர்கள் அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.

ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என தெளிவாக பேசியுள்ளார்.

Actress Anjali

Similar Posts