செய்திகள்

இயக்குனராக அவதாரமெடுக்கவுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!(Actress Anupama Parameswaran is going to incarnate as a director)

அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு காதல் கதைகளில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன.எனக்கு டைரக்டராக ஆசை உள்ளது. நிச்சயம் படம் டைரக்டு செய்வேன். டைரக்டர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஒரு ஆண்டு நடிப்புக்கு முழுமையாக இடைவெளி கொடுத்து விட திட்டமிட்டு உள்ளேன்.

கதாநாயகியாக நான் இன்னும் நடிக்க வேண்டி உள்ளது. அதனால் இப்போது நடிப்பின் மீதுதான் கவனம் உள்ளது. சில கதைகள் மனதில் உள்ளது. முன்னணி டைரக்டர்களிடம் பணியாற்றி தொழில் நுட்ப ரீதியாக சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு படம் டைரக்டு செய்ய வருவேன்” என்றார்.

Actress Anupama Parameswaran

Similar Posts