செய்திகள் | திரைப்படங்கள்

நடிகை அனுஷ்கா புதிய படம் மூலம் மீண்டும் வருகிறார் | Actress Anushka is making a comeback with a new film (First Look MissShetty MrPolishetty)

புதிய படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் நடிகை அனுஷ்கா .. வெளியான First Look போஸ்டர்.! நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Actress Anushka is making a comeback with a new film

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகை அனுஷ்கா, ரஜினிகாந்த், நாகர்ஜுனா, விஜய், அஜித், பிரபாஸ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்.

அதே போல, பெண் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகமதி உள்ளிட்ட பெரும் படங்களிலும் நடித்திருந்தார்.

இவை அனைத்தையும் தாண்டி ஒரு மகுடமாக பாகுபலி திரைப்படம் அனுஷ்காவுக்கு அமைந்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, ரம்யாகிருஷ்ணன், நாசர், தமன்னா மற்றும் பலர் நடித்து வெளியான இப்படத்தில் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா. தேவசேனா எனும் வீரம் மிகுந்த அவரது கேரக்டரை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக கதை பயணிக்கும் என்றாலும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவின் காட்சிகள் மாஸ் காட்டியது.

அப்படி இருக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த சைலன்ஸ படத்தில் நடித்திருந்த அனுஷ்கா ஷெட்டி, அதன் பின்னர் எந்த திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தொடர்ந்து, பொது இடங்களில் கூட அதிகம் தோன்றாமல் அனுஷ்கா ஷெட்டி இருந்து வந்தார்.

இதனால், அனுஷ்காவின் அடுத்த திரைப்படம் குறித்து அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர். அப்படி இருக்கையில், அனுஷ்காவின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

“Miss ஷெட்டி, Mr. பொலிஷெட்டி” என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ள சூழலில், மகேஷ் பாபு P இந்த படத்தை இயக்குகிறார். மேலும் அனுஷ்கா மற்றும் நவீன் பொலிஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படம் குறித்த அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தாலும் அதன் பின்னர் எந்த அறிவிப்பும் படக்குழு தரப்பில் வெளியிடப்படாமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய தென் இந்திய மொழியில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts