செய்திகள்

கல்லூரியில் அத்துமீறிய மாணவன், நழுவிய நடிகை அபர்ணா பாலமுரளி..!(Actress Aparna Balamurali escape while A delinquent student in college)

நடிகை அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள்” மூலம் அறிமுகமாகி நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் “பொம்மியாக ” ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் “தங்கம்” என்ற மலையாள திரைப்படத்தை ப்ரோமோட் செய்வதற்கு, கல்லூரி ஒன்றுக்கு அனைவரும் சென்றுள்ளனர்.

அப்போது அக்கல்லூரியைச் சார்ந்த மாணவர் ஒருவர், நடிகை அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.

இதன்போது அபர்ணா குறித்த மாணவருடன் கைகுலுக்கியப்படி பூங்கொத்தை வாங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபர்ணாவின் தோலில் கையை போட முயற்சித்துள்ளார்.

இதனை தெரிந்துக் கொண்ட அபர்ணா மெதுவாக நழுவியுள்ளார். மீண்டும் அத்துமீற மாணவன் முயற்சித்த போது, படக்குழுவினர் சத்தம் போட்டு குறித்த மாணவனை விரட்டியுள்ளார்கள்.

Actress Aparna Balamurali

Similar Posts