பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். | Actress Archana has officially announced her exit from the popular tv Serial Meenakshi Ponnunga.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, இந்தி எனப் பல மொழிகளில் நடித்தவர் தான் நடிகை அர்ச்சனா. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அர்ச்சனா மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார்.

அதில் அவர், எல்லாருக்கும் வணக்கம் நான் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டேன். எனக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. நான் விரைவில் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.