செய்திகள்

கோவிலில் அசிங்கப்படுத்தப்பட்ட நடிகை அர்ச்சனா ..!

நடிகை அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி சென்றுள்ளார்.

அங்கு செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது.

மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar Posts