கோல்டன் விழாவிற்கு சர்ச்சை ஆடை, பதிலடி நடிகை பாவனா..!( Actress Bhavana retaliates for Controversy dress for the Golden Festival)
நடிகை பாவனா தற்போது மலையாளத்தில் என்டிக்கக்கொடு பிரேமாண்டார்ன்னு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில்,
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. அப்போது நடிகை பாவனா அணிந்து வந்த உடை குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில்,
இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் பாவனா பதிவில், வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே போகும் நபர் அல்ல நான், என் சருமத்தின் நிறத்தில் உள்ளே ஆடை அணிந்திருந்தேன்.
மற்றபடி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடைக்கு உள்ளே (Skin Dress) இல்லாமல் ஆடை அணியவில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இது தெரியும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் “நான் கவலைப்பட வேண்டாம் என்று எண்ணி என் துக்கங்களை ஒதுக்கி வைக்க முயலும்போது, என்னைக் குறை சொல்லவும், புண்படுத்தவும் இங்கு பலர் இருக்கிறார்கள்.
மீண்டும் என்னை இருளில் தள்ள பார்க்கிறார்கள். இது போன்ற செயல்கள் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.


