வரப்போகும் கணவருக்கான தகுதிகளை வெளியிட்ட நடிகை கேத்தரின் தெரசா..!(Actress Catherine Tresa published the qualifications for her future husband)
தனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேன்டுமென நடிகை கேத்தரின் தெரசா விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கேத்தரின் தெரசா அளித்துள்ள பேட்டியில், தனக்கு வரப்போகும் கணவர் குறித்த சில எதிர்பார்ப்புகளை கூறியுள்ளார். கேத்தரின் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; ”எனக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும்.
எங்கு போனாலும் திருமணம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். எனக்கு கணவராக வர இருப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அவர் என்னை போல புத்தகங்கள் படிக்க வேண்டும். எனது உயரத்தைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை போலவே உணவை விரும்பி சாப்பிட வேண்டும். இந்த லட்சணங்கள் இருப்பவர்தான் எனக்கு சரியான ஜோடி. அப்படிப்பட்டவர் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு நடிகை கேத்தரின் தெரிவித்துள்ளார்.
