மகளுக்கு டேட்டிங்கில் நடந்துகொள்ளும் முறையை ஓபனாக சொன்ன நடிகை கவுரி கான்..! (Actress Gauri Khan opened up about her dating behavior to her daughter)
காபி வித் கரண் என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை பிரபல இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார்.
அடுத்து வரவிருக்கிற எபிசோடில் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் கலந்து கொண்டாராம்.
நிகழ்ச்சியில், கவுரி கானிடம் நிகழ்ச்சியை நடத்தும் கரண் கேட்ட கேள்வி ஒன்றில்,உங்களது மகள் சுகானாவுக்கு டேட்டிங் செல்லும்போது என்ன அறிவுரை வழங்குவீர்கள்? என அமைந்திருந்தது. அதற்கு கவுரி கான், ஒரே நேரத்தில் 2 பேருடன் டேட்டிங்கில் ஈடுபடாதே என்பேன் என்று கூறுகிறார். இதனை கேட்டு கரண் நிறுத்த முடியாத அளவுக்கு சிரிக்கிறார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் கரண் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.
