கை வைத்த இடம் சொல்லவே அருவறுப்பாக இருக்கு, நடிகை கிரேஸ் ஆண்டனி..!(Actress Grace Anthony said The place where the hand is placed is awkward to say the least)
சாட்டர்டே நைட் அக்டோபர் 7ஆம் தேதி இந்த படம் வருகிறது. இந்தப் பட பிரமோஷன் கோழிக்கோடு மாலில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துக்கொண்ட நடிகைகளை காண ஏராளமானோர் குவிந்தனர்.
அதில் நடிகையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஒரு ரசிகர் ஈடுபட்டதை கண்ட சக நடிகை அந்த நபரை பளார் என அறைந்தார்.
இந்த சம்பவம் குறித்து படக்குழுவினர் பன்தீரன்காவு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்படி அந்த காவல் நிலைய போலீஸார் விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகளிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அதில், கூட்டத்திலிருந்து ஒருவர் என்னை இழுத்தது போல் இருந்தது. அந்த நபர் என்னை எந்த இடத்தில் கை வைத்தார் என சொல்வதற்கே அருவறுப்பாக இருந்தது. இது வரை எத்தனையோ பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளோம்.
இது வரை இப்படி நடந்ததே இல்லை. என்னுடன் வந்த சக நடிகைக்கு இதே போன்ற சீண்டல் நடந்தது. அவர் உடனடியாக அடித்துவிட்டார். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டேன் என தெரிவித்திருந்தார்.
