செய்திகள்

31 குழந்தைகளை தத்தெடுத்ததில் மகிழ்ச்சியடைந்த நடிகை ஹன்சிகா..!(Actress Hansika is happy to have adopted 31 children)

நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டது மட்டுமன்றி ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.

இந்நிலையில் ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், ” நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டேன். இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.

திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி” என்றார்.

Actress Hansika

Similar Posts