செய்திகள்

திருமணத்திற்காக காளி கோவிலில் ஆசீர்வாதம் பெற்ற நடிகை ஹன்சிகா மோத்வானி..!(Actress Hansika Motwani gets blessings from Kali temple for marriage)

இன்னும் ஒரு மாதத்திற்குள், ராஜஸ்தானில் உள்ள கோட்டை அரண்மனையில் திட்டமிடப்பட்ட திருமணத்திற்கு தயாராகிவிட்டார் நடிகை ஹன்சிகா.

நடிகை தனது படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்து காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று திருமணத்திற்காக‌ பிரார்த்தனை செய்துள்ளார்.

“கண்ணன் படத்திற்காக ஹன்சிகா கடந்த 10 நாட்களாக சென்னையில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு வீட்டில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தினர். அந்த இடம் காளிகாம்பாள் கோயிலுக்கு அருகில் உள்ளது, அங்கு கண்ணனுடன் சென்று ஆசி பெற்றாராம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஹாரர் காமெடி படமாகவும், ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிரிஸ் நாயகனாம்.

Actress Hansika Motwani

Similar Posts