திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் – நடிகை இவானா ( Actress Ivana)

நாச்சியார் மற்றும் லவ் டுடே திரைப்படங்களில் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமானவர் நடிகை இவானா.
நடிகையாவதற்கு முன்பு
அலீனா ஷாஜி என்ற இயற்பெயரைக் கொண்ட இவானா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிப்ரவரி 25, 2000 ஆண்டு சங்கனாச்சேரி, கேரளா, இந்தியாவில் பிறந்தார்.


இவரின் தந்தை பெயர் சாஜி செரியன். தாயின் பெயர் அவர் குறிப்பிடவில்லை. இவருக்கு ஒரு சகோதரனும் மற்றும் சகோதரியும் இருக்கிறார்கள். தம்பியில் பெயர் லியோ சாஜி. அக்காவின் பெயர் லயா சாஜி.


இவர் படிப்பை கைவிடாமல் அதனையும் தொடர்ந்துகொண்டு நல்ல கதையில் நடிப்பையும் தெறிக்க விடுகிறாராம்.
அறிமுக திரைப்படத்தில்
நடிகையின் முதலாவது திரைப்படம் மலையாளத்தில் மாஸ்டர்ஸ் (2012) இல் தனது திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவானா மற்றொரு மலையாளத் திரைப்படமான ராணி பத்மினியில் (2015) ஒரு பாத்திரத்தில் நடித்தார், அதைத் தொடர்ந்து அனுராகா காரிக்கின் வெல்லம் (2016), அதில் அவர் முன்னணி நடிகருக்கான மகள் கதாபாத்திரத்தில் நடித்தார். வெல்லம் மலையாளப் படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார் நடிகை. அந்த திரைப்படம் தான் நாச்சியார்.

தமிழில் அறிமுகம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா இவானாவை முதன்முதலில் அனுராகா கரிக்கின் வெல்லம் படத்தின் மூலம் அறிந்தார், இயக்குனர் இணையத்தில் உலாவும்போது. பின்னர், பாலா இவானாவை தனது திரைப்படமான நாச்சியார் (2018) இல் ஜி.வி, பிரகாஷ், (இசை அமைப்பாளர் மற்றும் நடிகருடன் ) அரசி என்ற பாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தார். மேலும், இயக்குநர் பாலா இவானாவின் பெயரை எளிதாக அழைப்பதற்காக (அலீனா ஷாஜியிலிருந்து) மாற்றும்படி கேட்டதால் தனது உறவினரின் உதவியுடன், அவர் தனது பெயரை இவானா என்று மாற்றினார்.

இப்படத்தில் நடிகை ஜோதிகா டைட்டில் ரோலில் நடித்தார். ஒரு இளைஞன் தனது மைனர் காதலியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் உண்மையை வெளிக்கொணர வேலை செய்யும் போலீஸ் பெண்ணின் கதையை படம் சொல்கிறது.
இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் வணிகரீதியிலான வெற்றிகரமான திரைப்படங்களில் ஒன்றாகும், மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொண்ட வெற்றி விழாவை குழு நடத்தினர். தனது திறமையை தமிழில் நன்றாக காட்டியிருந்தாலும் அவர் கதாபாத்திரம் அப்போது பெரிதாக யாராலும் ஊகிக்கப்படவில்லை.

இவானாவின், தாய் மொழி மலையாளமென்பதால், பல தமிழ் கற்றல் வகுப்புகளில் கலந்து கொண்டார், அதே நேரத்தில் அவரது சக கலைஞர்களும் தமிழ் பேசுவதற்கு நிறைய உதவினார்கள்.
ஹீரோவில் கதையின் நாயகியாக
நாச்சியார் நடிப்பின் பின் அவர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல் ஆகியோருடன் 2019 ஹீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கதாநாயகியின் நண்பி மதி என்ற பெண் உப்பு நீரில் இயங்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க அதன் உரிமையை பிரபல தொழிலதிபர் திருட அவள் அதனை எதிர்த்து தோற்று கடைசியில் உயிரை விடும் பாத்திரத்தில் நடிப்பை பிண்ணியிருப்பார்.

இப்படம் சென்னையில் முதல் வார இறுதியில் ₹1.64 கோடிகளையும் (US$210,000) இரண்டாவது வார இறுதியில் ₹57.19 லட்சத்தையும் (US$72,000) வசூலித்துள்ளது. இப்படம் சென்னையில் 10 நாட்களில் ₹3.12 கோடியை (US$390,000) வசூலித்தது, இது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இருப்பினும், படத்தின் வேகம், திரைக்கதை மற்றும் நேர்மறையான கதாபாத்திரம் விமர்சனத்தைப் பெற்றது.
லவ் டுடேவில் கதாநாயகியாக
பின்னர் தான் இளைஞர்களை கவரும் கதாநாயகியாக லவ் டுடேவில்(லவ் டுடே 4 நவம்பர் 2022 )உருவெடுத்தார். இது பிரதீப் ரங்கநாதன் கோமாளிக்குப் பிறகு தனது இரண்டாவது இயக்கத்தில் எழுதி இயக்கி அவரே நடித்த திரைப்படமாகும். இளைஞர்கள் மற்றும் அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக மாறியது. அதில் மலையாளத்துடன் கொஞ்சி கொஞ்சி தமிழை பேசியிருப்பார். அது மட்டுமன்றி கொஞ்சம் கெட்ட வார்த்தையையும் பேசினார். இதனாலேயே அவர் வேற லெவலில் பேமஸ்.

சத்யராஜின் மகளாக பிரதீப்பின் காதலியாக நிகிதா என்ற பெயரில் நடித்திருப்பார். அதில் காதலர்கள் மொபைல்களை மாற்றுவதால் ஏற்படும் சந்தேகங்களை கெட்ட வார்த்தையில் வெளிப்படுத்துவர். இறுதியில் காதலிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து காதலியுடன் சேர்வார் நடிகர். இதற்கிடையில் பல சுவாரஸ்யங்கள்.
இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் இப்படம் ₹5 கோடி பட்ஜெட்டில் ₹70 கோடிக்கு மேல் வசூலித்தது மற்றும் 2022 இன் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது.
விருதுகள்
8வது SIIMA விருதுகளுக்கு சிறந்த அறிமுக நடிகை ( நாச்சியார்)
பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய சிறந்த துணை நடிகை (அரசி) போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். வெகு சீக்கிரத்தில் விருதுகளைப் பெறுவார்.

எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் லவ் டுடே இவானாவை ரசிகர்கள் மத்தியில் கவரச் செய்தது. அது மட்டுமன்றி இப்போது இளைஞர்களின் கனவுக்கண்ணியாக உள்ளார். மேலும் இவர் பல சிறந்த படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறது.
நடிகை இவானா தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.