கங்கனாக்கு பத்மஸ்ரீ கொடுத்ததால் சோகத்தில் நடிகை ஜெயசுதா..!(Actress Jayasudha saddened by giving Padma Shri to Kangana)
நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை அங்கீகரிக்க தவறி விட்டதாக ஜெயசுதா கோவமாக உள்ளார். இதுகுறித்து கோபத்தோடு ஜெயசுதா அளித்துள்ள பேட்டியில்,
”கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளனர். எனக்கு அது பரவாயில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனாலும் கங்கனா ரணாவத் 10 படங்களுக்குள் மட்டுமே நடித்து இந்த விருதை பெற்று இருக்கிறார்.
ஆனால் என்னை போன்ற பலர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறோம். ஆனால் நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறோம். கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கும் பெண் இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை.
தென்னிந்திய நடிகைகளை அரசு அங்கீகரித்து பாராட்டவில்லை என்பதை வருத்தமாக உணர்கிறேன்” என்றார்.
