செய்திகள்

மீண்டும் பாலிவுட் பக்கம் நடிகை ஜோதிகா கவனம் செலுத்தி வருகிறார் | Actress Jyothika is focusing on Bollywood again.

நடிகை ஜோதிகா தமிழ் , கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் நடித்துள்ள இவர் குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றிருந்தார்.

Actress Jyothika is focusing on Bollywood again.

2006ல் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பை நிறுத்திய ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

Actress Jyothika is focusing on Bollywood again.

தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தி கோர். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து நடிகை ஜோதிகா பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு சென்றுள்ளார் ஜோதிகா.

ஏற்கனவே ஸ்ரீ எனும் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஜோதிகா மீண்டும்ஒரு புதிய ஹிந்தி படத்தில் கமிட்டாகி உள்ளாராம்.

இப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். குயின் படத்தை இயக்கிய இயக்குனர் விகாஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Similar Posts