செய்திகள் | திரைப்படங்கள்

நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்துள்ளார் | Actress K. R. Vijaya is back on screen after a long gap

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா திரையில் மீண்டும் நடிக்கும் இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Actress K. R. Vijaya is back on screen after a long gap

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா அவர்கள் இப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார். ‘சாவி’ படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்னண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Actress K. R. Vijaya is back on screen after a long gap

மூத்த நடிகை கே ஆர் விஜயா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது கேரவனே வேண்டாம் படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில் தான் இருப்பார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். என படம் குறித்து இயக்குநர் ரவி பார்கவன் கூறியிருக்கிறார்.

“அசுரன்” திரைப்பட படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை,டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Similar Posts