செய்திகள்

குழந்தை பிறந்த பின்னும் குதிரை சவாரியில் நடிகை காஜல் அகர்வால்..!(Actress Kajal Aggarwal riding a horse even after giving birth)

‘இந்தியன் 2’. அப்படம் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

தற்போது இந்தப் படத்திற்காக காஜல் அகர்வால் குதிரையேற்றப் பயிற்சி செய்து வருகிறார். குழந்தை பெற்றதற்குப் பின்பு தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், மீண்டும் பழைய நிலைக்கு வருவது பற்றியும் நேற்று தன்னுடைய பெரிய பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.

“இந்தியன் 2, உங்களுடன் மீண்டும் பயிற்சியில் குதித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது பணியில் புதிய திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், பின்னர் அவற்றை பொழுதுபோக்காக தொடர்வதற்கும் தூண்டியுள்ளீர்கள்.

வீடு என்று நான் அழைக்கும், இத்தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், எனக்கு வாய்ப்பளித்ததற்கும், என்னை மேம்படுத்திக் கொள்ள உதவுவதற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actress Kajal Aggarwal

Similar Posts