செய்திகள்

புதிய தொழிலை ஆரம்பித்த நடிகை காஜல் அகர்வால் | Actress Kajal Aggarwal started a new business.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார்.

Actress Kajal Aggarwal started a new business.

நடிகை காஜல் அகர்வால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த கனவு பிசினஸை தற்போது நனவாக்கிய சந்தோஷத்தில் அந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

காஜல் எனும் கண் மை அழகு சாதன பொருளை விற்பனை செய்யும் பிசினஸை ஆரம்பித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையே சிறப்பு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தி உள்ளார்.

இந்த அழகு வணிக யோசனை தனது கணவரின் எண்ணங்களிலிருந்து தொடங்கியது என்றும், மேலும் தனது வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் கணவர் கௌதம் கிச்சுலுவுக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.

Similar Posts