திரைப்பிரபலங்கள் | செய்திகள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் ‍‍‍‍‍– கல்யாணி பிரியதர்ஷன் (Actress Kalyani Priyadarshan)

Actress Kalyani Priyadarshan

உதவி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்தி தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றி ஒரு நடிகையாக தன்னைக் காட்டியவர் கல்யாணி பிரியதர்ஷன்.

நடிகையாவதற்கு முன்பு

Actress Kalyani Priyadarshan

கல்யாணி பிரியதர்ஷன் பிறப்பு 5 ஏப்ரல் 1993 ல் சென்னை,இந்தியாவில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸிக்கு மகளாக பிறந்தார். அவரது குடும்பம் ஒரு மலையாள குடும்பம் ஆகும். இவருக்கு சித்தார்த் என்ற தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். அவர் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் நகரில் முடித்தார், பின்னர் சிங்கப்பூரில் படித்தார், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார்.

Actress Kalyani Priyadarshan

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நியூயார்க் நகரத்தில் உள்ள பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பிறகு, மாசசூசெட்ஸில் உள்ள வில்லியம்ஸ்டவுனில் நடந்த ‘வில்லியம்ஸ்டவுன் தியேட்டர் ஃபெஸ்டிவலில்’ சேர்ந்தார். இந்தியா திரும்பிய அவர், பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டரில் நடந்த நடிப்புப் பட்டறையிலும் கலந்து கொண்டார்.

உதவி வடிவமைப்பாளராக

வடிவமைப்பில் ஆர்வமுள்ளதால் 2013 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி மொழி ஹீரோதிரைப்படமான க்ரிஷ் 3ல் சாபு சிரிலின் கீழ் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.₹95 கோடி பட்ஜெட்டில் இந்தத் திரைப்படம் உலகளவில் ₹393.37 கோடியை வசூலித்த திரைப்படமாக மாறியது. அதன் பின் 2016 ஆம் ஆண்டில் நடிகர் விக்ரம் மற்றும் நயந்தாரா நடிப்பில் வெளியான இருமுகன் என்ற தமிழ் திரைப்படத்தில் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றினார்.இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

நடிகையாக முதல் படத்தில்

இப்படி உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கையில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்திலேயே தெலுங்கின் பெரிய ஸ்டாரான நாகர்ஜூனா தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் நாகர்ஜுனாவின் மகன் அகிலுடன் நடிக்க ஒப்பந்தமாகினார். அந்த் திரைப்படம் ஹலோ என பெயரிடப்பட்டு வெளியானது. அகிலுக்கு ஜோடியாக ஜுன்னு என்ற பெயரில் அவரது நண்பியாக இருந்து பின் காதலியாக மாறுகிறார். இத்திரைப்படத்தால் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். அவரது நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டது. அது மட்டுமன்றி அவர் தனது நடிப்பிற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த தெலுங்கு பெண் அறிமுகத்திற்கான SIIMA விருதையும் வென்றார்.

Actress Kalyani Priyadarshan

சித்ரலஹரி காதலில்

அதனைத் தொடர்ந்து அடுத்த தெலுங்கு திரைப்படமான சித்ரலஹரி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இது 2019 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். கிஷோர் திருமலா எழுதி இயக்கத்தில் சாய் தரம் தேஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது இந்தப் படம். லஹரி என்ற பாத்திரத்தில் நடிகருடனான காதல் நடிப்பை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் திரையரங்குகளின் முடிவில் உலகம் முழுவதும் சுமார் ₹25–27.1 கோடியை வசூலித்தது.

Actress Kalyani Priyadarshan

அதே ஆண்டிலேயே அவரது நடிப்பு திறமைக்காக ரணரங்கம் என்ற தெலுங்கு படத்தில் ஷர்வானந்த், காஜல் அகர்வாலுடன் நடிக்க வாய்ப்பு உருவாகியது. இக்கதை ஒரு சட்டவிரோதமான மது கடத்தலையே மையமாக கொண்டுள்ளது ஒரு வலுவான தொடக்கம் இருந்தபோதிலும், திரைப்படம் வணிக ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஆனால் நடிப்பில் நடிகை பக்காவாக தந்து பாத்திரத்திற்கு ஏற்றவாறே நடித்திருந்தார்.

Actress Kalyani Priyadarshan

தமிழில் அறிமுகம்

தொடர்ந்து அவரது முதல் தமிழ்ப் படமான 2019 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இதில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, இவானா மற்றும் அபய் தியோல் ஆகிய நடிகர்களுடன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்ததாகும். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீரா பாத்திரத்தில் துறு துறுவென தனது நடிப்பைக் காட்டினார். முதல் தமிழ்ப்படம் என்பதால் சற்றே ரசிகர்களிடம் கவரப்பட்டார்.

Actress Kalyani Priyadarshan

மலையாளத்தில் அறிமுகம்

வரனே அவஷ்யமுண்ட் (மாப்பிள்ளை தேவை) என்பது அவர் மலையாளத்தில் அறிமுகமான படமாகும். 2020 ஆம் ஆண்டு வெளியானது. இது அனூப் சத்யன் (அவரது இயக்குனராக அறிமுகமானது) எழுதி இயக்கியது மற்றும் துல்கர் சல்மான் தயாரித்தது. இப்படத்தில் சுரேஷ் கோபி, துல்கர் சல்மான், ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்தனர். இதில் முதல் நடிக்கவிருந்த நஸ்ரியாவுக்கு பதிலாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார்.இப்படம் அதிகளவு வசூலைக்குவித்தது மட்டுமன்றி சிறந்த அறிமுக நடிகை என அவருக்கு பட்டமும் பெற்றுக்கொடுத்தது.

Actress Kalyani Priyadarshan

தொகுப்பு திரையில்

சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரால் இயக்கப்பட்ட ஐந்து குறும்படப் பகுதிகளைக் கொண்டு 2020 ஆம் வெளியான தொகுப்புத் திரைப்படமான புத்தம் புது காலை என்ற தமிழ்ப்படத்தில் நடித்தார்.இத்திரைப்படம் இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மார்ச் 2020 இல் நாட்டின் 21 நாள் லாக்டவுனின் பின்னணியில் எடுக்கப்பட்டது. இதில் வரும் இளமை இதோ இதோ என்ற தொடர்ச்சியில் ஊர்வசியின் இளமைபருவத்திற்காக இளைய லட்சுமி கிருஷ்ணனாக நடித்திருந்தார்.

Actress Kalyani Priyadarshan

பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படத்தில்

புத்தம் புது காலையை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகவும் பாக்ஸ் ஆபிஸில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமுமான மாநாட்டில் நடித்தார். இது வெங்கட் பிரபு எழுதி இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யாவுடன் கல்யாணி இணைந்து நடித்ததாகும். இது ஒரு டைம் லூப் திரைப்படமாகும். 2019 இல், ராஷி கண்ணா, கதாநாயகியாக நடிக்கவிருந்து ஹீரோவில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த கல்யாணியை பார்த்து அவரை நடிக்க செய்தனர். இப்படம் ₹156 கோடிக்கு மேல்வசூலித்து. மாஸ்டர் மற்றும் அன்னாத்த‌ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாகும். நடிககை கல்யாணிக்கும் இதுவே தமிழில் அதிக வசூலைக் குவித்த திரைப்படமாகியது.

Actress Kalyani Priyadarshan

சிறப்பு தோற்றத்தில்

2021 ற்கு பிறகு முற்றாக மலையாளத்தில் இறங்கிய இவரின் அடுத்த படம் மரக்கார்: அரபிக் கடலின் சிங்கம் ஆகும். அப்பாவின் இயக்கத்தில் நடித்த திரைப்படமாகும். இதில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் கல்யாணி பிரியதர்ஷன் துணை வேடத்தில் நடித்தார். தமிழிலும் ரீமெக் செய்யப்பட்டது.இப்படத்தில் ஒரு பாத்திரத்திற்காக தானே தன் தந்தையிடம் கேட்டு கல்யாணி “சிறப்பு தோற்றத்தில்” நடித்தார். அப்பாவின் படத்தில் நடித்திருந்தாலும் நடிப்பில் அமர்க்களப் படுத்தியிருந்தார். இது 67 வது தேசிய திரைப்பட விருதுகளில், திரைப்படம் மூன்று விருதுகளை வென்றது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்று மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

Actress Kalyani Priyadarshan

ஹிட் அடித்த ஹிருதயத்தில்

அதன் பின் ஹிட் அடித்த காதல் திரைப்படமான ஹிருதயம் படம் மூலம் இந்த ஆண்டு 2022ல் ரசிகர்கள் மத்தியில் பரவலாகியிருந்தார். இது வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கியது. பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். இப்படம் உலகம் முழுவதும் ₹79.8 கோடிவசூல் செய்து, அந்த ஆண்டின் 3வது அதிக வசூல் செய்த மலையாளப் படமாக அமைந்தது. இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் (IMDB) மூலம் 2022 ஆம் ஆண்டின் சிறந்த தரமதிப்பீடு பெற்ற இந்தியத் திரைப்படமானது. இப்படத்தின் பின் தேடும் நடிகையாக மாறினார் கல்யாணி.

Actress Kalyani Priyadarshan

இதே ஆண்டே வெளியான Bro Daddy என்ற பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவான படத்திலும் நடித்து பிரபலமானார். மோகன்லால் மற்றும் மீனா, ப்ருத்வி போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் மீண்டும் நடித்தார். கனிகா மற்றும் லாலு அவர்களின் மகளாக அன்னா குரியன் பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் நடிகைக்கு நன்மதிப்பை அதிகமாக கொடுத்தது.

Actress Kalyani Priyadarshan

அதிரடித் திரைப்படத்தில்

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் திரைப்படமான தல்லுமாலாவிலும் சிறப்பித்தார். இது காலித் ரஹ்மான் இயக்கியது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோருடன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். இது 9 அத்தியாயங்களைப் கொண்டு வெளியானது.கல்யாணி பிரியதர்ஷன், பாத்திமா பீவி அல்லது பீபாத்து என்ற பாத்திரத்தில் தான் களமிறங்கினார். இப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது மற்றும் இதுவரை டோவினோ தாமஸ் திரைப் படமாக அதிக வசூல் செய்தது. ஒரே ஆண்டில் 3 மலையாள படங்களில் நடித்து தனது பெயரை மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் நிலை நிறுத்தி கொண்டார்.

Actress Kalyani Priyadarshan

வரவுள்ள திரைப்படம்

அறிமுக இயக்குனர் மனு சி குமார் இயக்கத்தில் சேஷம் மைக்கேல் பாத்திமா என்ற மலையாள படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றியது ஆகும்.

Actress Kalyani Priyadarshan

பெற்ற விருதுகள்

Actress Kalyani Priyadarshan

2018 ல் ஹலோ திரைப்படத்திற்காக 65வது ஃபிலிம்பேர் விருதுகள் சிறந்த பெண் அறிமுகத்திற்கான தென் பிலிம்பேர் விருதையும், சிறந்த பெண் அறிமுகத்திற்கான 7வது SIIMA விருதையும், அப்சரா விருதுகளில் இந்த ஆண்டின் முதல் கதாநாயகியாகவும் வென்றார்.

வரனே அவஷ்யமுண்ட் திரைப்படத்திற்காக‌ 2021 சிறந்த பெண் அறிமுகத்திற்கான 10வது SIIMA விருதையும் வென்றார்.

Actress Kalyani Priyadarshan

நடிகையாக ,ஒரு கலை இயக்குனராகவும் மென்மேலும் மலையாளத்தில் மட்டுமன்றி தெலுங்கு, தமிழ்த் திரை உலகிலும் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.

Similar Posts