சந்திரமுகி 2 படக்குழுவை டார்ச்சர் செய்யும் நடிகை கங்கனா ரனாவத்..!(Actress Kangana Ranaut tortures Chandramuki 2 crew)
சந்திரமுகி 2 படத்தில் தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறாராம். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் கங்கனா 30 பேர் அடங்கிய மேக்கப், காஸ்டியூம், சமையல் செய்யும் நபர்களை அழைத்து வருகிறாராம்.
மேலும் ஷூட்டிங்கிற்கு தனி விமானத்தில் வருவதோடு 5 ஸ்டார் ஓட்டலும் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அந்த ஓட்டலில் அவரின் உதவியாளர்கள் தான் தங்கியிருக்கிறார்களாம்.
கங்கனா சிட்டிக்கு உள்ளே இருக்கும் ஒரு ஓட்டலில் தான் தங்கியிருக்கிறார். இதனால் படக்குழுவினருக்கு டார்ச்சராக இருக்கிறதாம். அவரை ஏன் கமிட் செய்தோம் என்று பி வாசு உட்பட பலரும் புலம்பி வருகிறார்களாம்.
