செய்திகள்

நயன்தாராவை குறித்து சர்ச்சை பதிவு இட்ட நடிகை கஸ்தூரி..!(Actress Kasturi registered a controversy about Nayanthara)

அக்டோபர் 9-ம் தேதியான (நேற்று) இரு ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா அம்மா ஆகியுள்ளார் என்று அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கவின், விஜே டிடி நீலகண்டன் உள்ளிட்டோர் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆனால், நடிகை கஸ்தூரி செய்துள்ள ட்விட் தற்போது பெரும் பிரச்சினையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அவரது பக்கத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக முடியாதவர்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Actress Kasturi

Similar Posts