செய்திகள்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் | Actress Keerthy Suresh put an end to rumors.

முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். இவர் தற்போது மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actress Keerthy Suresh put an end to rumors.

இந்நிலையில் தற்போது தனது நெருங்கிய நண்பன் ஃபர்ஹான் பின் லியாகத்தை கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Actress Keerthy Suresh put an end to rumors.

இவர் கீர்த்தி சுரேஷின் நீண்டநாள் நெருங்கிய நண்பர். அண்மையில் கூட கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்றும் அவரைத்தான் காதலித்து திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கிசு கிசுக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த நபர் தான் இவரா? என எல்லோரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் வைரலானதை கவனித்த கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த பதிவில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் தன்னுடைய நண்பர் என்றும் அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

Similar Posts