செய்திகள்

பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை குஷ்பு | Actress Khushbu taking pictures with celebrities

தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர் தான் குஷ்பு.

Actress Khushbu taking pictures with celebrities

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Actress Khushbu taking pictures with celebrities

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனை முன்னிட்டு நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், “இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக நரேந்திர மோடிஜிக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் எனது நன்றிகள். உங்கள் தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் நாரி சக்தியைப் (பெண் சக்தி) பாதுகாக்கவும், மற்றும் வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன். ஜெய்ஹிந்த்” என குஷ்பு கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி நடிகர் சிரஞ்சீவி, “உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் குஷ்பு!

நீங்கள் நிச்சயமாக இந்த பதவிக்கு தகுதியானவர். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உங்கள் இருப்பை நம்புங்கள்.

இந்நிலையில் நடிகை குஷ்பு, நடிகர் ஜாக்கி ஷெராப் உடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்னுடைய ஹீரோ’ என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

அது மாத்திரம் அல்லாது இந்திய சினிமாவின் பெருமைகளை சந்தித்த எஸ்.எஸ். ராஜமௌலி காரு மற்றும் ஆஸ்கார் விருது வென்ற எம்.எம்.கீரவாணி காரு ஆகியோரையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts