செய்திகள்

பிரபாஸுடன் காதல் குறித்து தெளிவு படுத்திய நடிகை கிருத்தி சனோன்…!(Actress Kriti Sanon clarified about her romance with Prabhas)

ராமாயண கதையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கிருத்தி சனோனும் நடித்துள்ளனர்.

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிருத்தி சனோன் பேட்டி ஒன்றில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்த செய்திக்கு நடிகை கிருத்தி சனோன் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ” இது காதலோ அல்லது விளம்பரமோ இல்லை, ஒரு நிகழ்ச்சியில் எங்கள் bhedia கொஞ்சம் கேளிக்கையாக பேசிவிட்டார். இது வதந்திக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஏதாவது ஒரு இணையதளம் என்னுடைய திருமண தேதியை அறிவிப்பதற்கு முன்பு நானே விளக்கம் அளிக்கிறேன். வதந்திகள் ஆதாரமற்றவை” என்று கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.

Actress Kriti Sanon

Similar Posts