செய்திகள்

என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது என நடிகை குஷ்பூ..! மரணமடைந்த சகோதரன்..!(Actress Kushboo said that my brother’s journey has ended today, A dead brother)

நடிகை குஷ்பூ கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது மூத்த சகோதரன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும், அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

தற்போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். இப்போது, இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது பதிவில், உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும்.

என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Actress Kushboo

Similar Posts