செய்திகள்

நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என நடிகை லட்சுமி..!(Actress Lakshmi says I am still alive)

நடிகை மட்டுமின்றி இயக்குநரான லட்சுமி திடீரென காலமாகி விட்டதாக சமூக வலைதளங்களில் இன்று செய்தி வைரலானது.

இது தொடர்பாக, நடிகை லட்சுமியை பலர் தொடர்பு கொண்டு கேட்ட போது அது முற்றிலும் வதந்தி எனத் தெரிய வந்தது. இந்த வதந்தி குறித்து போன் செய்து கேட்ட செய்தியாளர்களிடம், ” நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்பா.

பிறந்து விட்டால் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது.

யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை கிளப்பி விட்டது எனத் தெரியவில்லை. எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறிப்போய் போன் போட்டு காலையில் இருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும், திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர்.

என் மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும் போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Actress Lakshmi

Similar Posts