திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் - நடிகை மாளவிகா மோகனன்(Actress Malavika Mohanan)

பெரிய நட்சத்திரங்களான ரஜினி மற்றும் விஜய்யுடன் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஹிந்தி, தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகென தனது அடையாளத்தைக் முத்திரை பதித்து வெற்றியின் உச்சத்தில் உள்ள நடிகையாவார்.
நடிகையாவதற்கு முன்பு
நடிகை மாளவிகா 5 ஆகஸ்ட் 1993 அன்று கேரளாவின் கண்ணூரில் உள்ள பையனூரில் பிறந்தார் மற்றும் மகாராஷ்டிராவின் மும்பையில் வளர்ந்தார். அவரது தந்தையின் பெயர் கே யு மோகனன், பிரபல பாலிவுட் மற்றும் மலையாள ஒளிப்பதிவாளர், மற்றும் அவரது தாயார் பீனா மோகனன், ஒரு இல்லத்தரசி. இவருக்கு ஆதித்யா மோகனன் என்ற இளைய சகோதரர் உள்ளார்.


மாளவிகா தனது தந்தையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப்படிப்பை முடித்தார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஒரு நாள் தந்தையுடன் நடிகர் மம்முட்டி நடித்த ஃபேர்னஸ் க்ரீமின் படப் பிடிப்பிற்குச் சென்றிருந்தார். அப்போது, அவர் மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்த வேளை, அவர் நடிக்கும் ஆர்வம் குறித்து மாளவிகாவிடம் விசாரித்தார். அதன் பின் மலையாளத் திரைப்படமான அவரது மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு நடிக்க வாய்ப்பை அளித்தார். அதுவே அவரது நடிப்பிற்கு திருப்பு முனை.
அறிமுக படத்தில்

அவர் கதையை பரிசீலிக்க நேரம் எடுத்து அதன் பின் ஏற்றுக்கொண்டார். அந்தப் படம் தான் பட்டம் போலே. இது 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள காதல் திரைப்படமாகும்.(ஒரு தமிழ் பிராமண இளைஞருக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான உறவை விவரிக்கும் காதல் நாடகத் திரைப்படம்). அறிமுக இயக்குனர் ஒளிப்பதிவாளர் அழகப்பன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்த திரைப்படமாகும். கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை இந்த திரைப்படம். திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும் அவருக்கு பெயரைப்பெற்று தரவில்லை.
அந்த நேரத்தில் அவர் ஃபேஷனில் தொடர்ந்து ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார். “தி ஸ்கார்லெட் விண்டோ” என்ற இந்திய இன இணைவு ஆடை பிராண்டை நிறுவினார். சொந்த வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார் மாளவிகா.

பாலே நடனக் கலைஞராக

அதன் பின் அவரது இரண்டாவது படமான 2015 ஆம் ஆண்டில் வெளியான நிர்நாயகமில் அவர் ஒரு பாலே நடனக் கலைஞராக நடித்தார். ஆனால் வணிகரீதியாக பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக நாலே, பழங்குடிப் பெண்ணாக நடித்தார். ஆனால் அந்தப்படம் தயாரிப்பின் பாதியிலேயே கைவிடப்பட்டது.
முதல் கன்னட படத்தில்

மீண்டும் அவரது முயற்சியில் தனது முதல் கன்னட படமான நானு மாட்டு வரலக்ஷ்மியில் (2016) அறிமுக நடிகரான பிருத்விக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் குறைந்திருந்த போதிலும், மாளவிகாவின் பெயரிடப்பட்ட வரலக்ஷ்மி பாத்திரத்தை விமர்சகர்களால் பாராட்டப்பட்டதன் மூலம் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
ஹிந்தியில் அறிமுகம்

அதன் பின் முதன் முதலில் ஹிந்தியில் மஜித் மஜிதி எழுதி இயக்கிய பியாண்ட் தி க்ளவுட்ஸ் (2017) இல் மும்பையின் தோபி காட் பகுதியைச் சேர்ந்த தாரா என்ற ஏழைப் பெண்ணாக நடித்ததன் மூலம் நடிகையாக மேலும் முன்னேற்றம் அடைந்தார். உடன்பிறப்புகளுக்கிடையேயான பிணைப்பை மையமாகக் கொண்டது படத்தின் கதை. இதில் அவர் அறிமுகமான இஷான் கட்டரின் மூத்த சகோதரியாக நடித்தார். குறிப்பாக அவர் தனது இளங்கலைப் படிப்பின் போது மஜிதின் படங்களில் தொடர்ந்து படிக்கவும் கட்டுரைகள் எழுதவும் வேண்டும் என்று கருதினார்.
படத்திற்காக, அவர் சிறைக் காட்சிக்காகப் படமெடுக்க பதினைந்து நாட்களில் எட்டு கிலோ எடையைக் குறைத்தார், மேலும் சேரிவாசியின் தோற்றத்தை சரியாகப் பெறுவதற்காக பல நாட்கள் முடியைக் கழுவாமல் இருந்தார். ஏப்ரல் 2018 இல் உலகம் முழுவதும் வெளியிடப்படுவதற்கு முன்பு, பல சர்வதேச விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. நவம்பர் 2017 அன்று இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
மம்முட்டியுடன் பொலிஸ் அதிகாரியாக

பின்னர் அவர் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான தி கிரேட் ஃபாதர் (2017) திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். மம்முட்டி, ஆர்யா மற்றும் சினேகா உள்ளிட்ட பெரிய நடிகர்களும் நடித்திருந்தனர். தொடர் தொடர் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கொலை குற்றங்களைகண்டுபிடிப்பதே கதையாகும். இதில் பொலிஸ் அதிகாரியாக மிரட்டியிருந்தார். இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. . அதன்பிறகு, அவர் நிறுத்தாமல் பல வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார்.
தமிழில் அறிமுகம்

வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும்போதே 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கார்த்திக் சுப்புராஜின் பேட்ட திரைப்படத்தில் அவர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட குழும நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். தமிழ் மொழியில் தனது முதல் படத்திற்காக, மாளவிகா தனது வரிகளைப் பயிற்சி செய்ய ஒரு தமிழ் பேசும் ஆசிரியரை நியமித்தார். அவர் படத்தில் மாலிக்கின் (சசி குமார்) மனைவி கிராமத்து பெண்மணி பூங்கொடியாக தமிழில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். மிகச்சிறிய திரை நேரம் மட்டுமே இருந்த போதிலும், மாளவிகா தனது நடிப்பால் தமிழ்நாட்டின் அவரின் பெயரை பதித்தார். திரையரங்குகளின் முடிவில் உலகம் முழுவதும் மொத்தம் ₹237−250 கோடி வசூல் செய்து அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக ஆனது.
வெப் சீரிஸில்

2019இல் மாளவிகா மோகனன் Lakme Fashion Week 2019 கலந்து கொண்டார். மசாபா மசாபா என்ற ஆங்கில வெப் சீரிஸிலும் 2020ல் கேமியோ ரோலில் நடித்தார். இதை சோனம் நாயர் எழுதி இயக்குகிறார் மற்றும் அஷ்வினி யார்டியின் வினியார்ட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தத் தொடர் Netflix இல் 28 ஆகஸ்ட் 2020 அன்று திரையிடப்பட்டது.
அதிக வசூலான விஜய் படத்தில்

பின்னர் ரஜினியின் திரைப்படத்தில் நடித்ததால் தளபதி விஜய்யுடனும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான மாஸ்டர் (2021) இல் தோன்றினார். சாருலதாவாக “சாரு” ஒரு NGO-தன்னார்வ மற்றும் புதிதாக பணியமர்த்தப்பட்ட J.D. கல்லூரியில் விரிவுரையாளராக நடித்தார். அதுமட்டுமன்றி அவர் சிறார் தடுப்பு வசதியின் குற்றச் செயல்களை விசாரித்து போராடுவார்.பின்னர் வ்ஜயின் மீதான காதல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளும் பாத்திரமாக நடித்து இருப்பார். இந்தத் திரைப்படம் வணிகரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் அவரது கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. சுமார் ₹230–300 கோடிகளை வசூலித்தது, இதனால் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது. இதன் மூலம் புகழ் பெற்றார்.
தனுஷுடன்

2022 ஆண்டில் முதல் தமிழ்ப் படம் மாறன். இது கார்த்திக் நரேன் எழுதி இயக்கினார். இப்படத்தில் தனுஷ், ஸ்ம்ருதி வெங்கடுடன் மாளவிகா மோகனன் நடித்தார். ஜி.கே படத்தொகுப்பும் செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்கிற்காக மாறன் நேரடியாக வெளியிடப்பட்டது. இப்படத்தில் தாராவாக மாளவிகா மோகனன் தனுஷின் காதலியாக நடித்துள்ளார். அவரது பாத்திரத்திற்கு ஏற்றாற் போல் கெத்தாக நடித்திருப்பார். ஆனாலும் விர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
2022 ல் தௌபா என்ற பாட்ஷா பாடிய பாடலில் நடனமும் ஆடியுள்ளார்.

வரவிலிருப்பது

இவர் தற்போது சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். 2023 கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தின் விக்ரமுக்கு ஜோடியாக நடிகையாக நடிக்கவுள்ளார். மேலும் நடிகை தனது இன்ஸ்டாகிராமில் மாலத்தீவில் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

விருதுகள்
2019 பியோண்ட் தி க்ளவுட்ஸ் திரைப்படத்தில் உணர்வான நடிப்புக்காக ஆசியாவிஷன் விருதை வென்றார். அதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான திரை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன் இருக்கிறார் இப்போது.தனது ரசிகர்களை அவரது அழகால் கவர்ந்திழுப்பார். அவரது அனைத்து சமூக ஊடக கணக்குகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அழகி நடிகை மாளவிகா மோகனன் தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.