செய்திகள்

உருவகேலிக்கு பதிலடி கொடுத்த நடிகை மஞ்சிமாமோகன்…!(Actress Manjimamohan responded to mockery)

அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்குக்கும் காதல் மலர்ந்து சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு திருமணம் நடந்தபோது பலரும் வாழ்த்திய நிலையில், சிலர் உருவ கேலியும் செய்துள்ளனர்.

துகுறித்து மஞ்சிமா மோகன் அளித்துள்ள பேட்டியில், ”நான் சமூக வலைத்தளத்தில் மட்டும் உருவ கேலியை எதிர்கொள்ளவில்லை. எனக்கு திருமணம் நடந்தபோதும் சிலர் உருவ கேலி செய்தனர். அதை பொருட்படுத்தவில்லை.

எனது உடல் எடையில் நான் சவுகரியமாக இருக்கிறேன். தேவை ஏற்படும்போது உடல் எடையை குறைக்க எனக்கு தெரியும். தொழில் ரீதியாக எனது உடல் எடையை குறைக்க வேண்டி வந்தால் எடையை குறைப்பேன்” என்றார்.

Actress Manjimamohan

Similar Posts