ஜஸ்வர்யா ராயை பார்த்து பொறாமை கொள்ளும் நடிகை மீனா..!(Actress Meena is jealous of Aiswarya Rai)
இன்று பிரமாண்டமாக வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படம் முதல்நாளில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை மீனா பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், இதற்கு மேலும் என்னால் ரகசியமாக வைத்திருக்க முடியாது. எனக்கு பொறாமையாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவர் மீது பொறாமை கொள்கிறேன்.
ஜஸ்வர்யா ராய், ஏனென்றால் பொன்னியின் செல்வனில் எனது கனவு நந்தினி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்” என பதிவிட்டு இருக்கிறார்.
நந்தினி கதாபாத்திரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
