திரையுலகில் 40 ஆண்டுகளாக ஜொலித்து வரும் நடிகை மீனாவுக்கு திரை நட்சத்திரங்கள் பாராட்டு விழா நடத்திய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. | Photos were taken at the ceremony where screen stars felicitated actress Meena, who has been shining for 40 years in the film industry.
நடிகை மீனா இளம் வயதிலேயே தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிவிட்டார் சிவாஜியுடன் நெஞ்சங்கள் என்ற படத்தில்தான் தமிழில் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினியுடன் சிறுவயதாக இருந்தபோது மீனா நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படமாக உள்ளது.

நடிகை மீனா திரையில் நடிக்கத் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சியை நேற்றைய தினம் ஒழுங்கு செய்திருந்தனர்..இதில் ரஜினி, ஜீவா, ரோஜா, சரத்குமார், ராதிகா, சினேகா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து நாயகியாக 90களில் துவங்கிய மீனாவின் பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் மீனா நடித்துள்ளார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். ரஜினி -மீனா காம்போவில் வெளியான முத்து படம் ஜப்பானிலும் திரையிடப்பட்ட நிலையில், மீனாவிற்கு ஜப்பான் ரசிகர்களும் உள்ளனர்.

6 மொழிகளை அறிந்த மீனா சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் தனியாக தன்னுடைய படிப்பை தொடர்ந்து, முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞரான மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை பெற்றவர்.

40 ஆண்டுகளை கடந்த மீனா கடந்த 1982ம் ஆண்டில் இவரது முதல் படம் நெஞ்சங்கள் வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், மீனாவும் தன்னுடைய திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் மீனா 40 என்ற நிகழ்ச்சிநேற்றைய தினம் நடைபெற்றது.

Behindwoods மற்றும் Say yes events இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்து நடத்தவுள்ளனர். இன்று நேற்று மாலை 5 மணிக்கு நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடந்துள்ளது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

