செய்திகள்

உதவி இயக்குனராக நடிகை நயந்தாரா..!(Actress Nayanthara as assistant director)

நடிகை நயன் தாரா முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.அதன்பின் மலையாளத்தில் இரு படங்களில் நடித்து முடித்தப்பின் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

இந்நிலையில் நயன் தாரா நடிப்பைத்தாண்டி இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.அப்படி இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன் தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான படம் ஆரம்பம்.

அப்படத்தில் நடிகை நயன் தாரா உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறாராம். அப்படத்தின் ஷூட்டிங்கின் போது புல்லர் புரூப் ஜாக்கெட்டுகளை உதவி இயக்குனர்கள் கொண்டுவர தாமதப்படுத்தியிருந்ததால் விஷ்ணுவர்தன் அவர்கள் மீது கோபப்பட்டு வெளியே போகச்சொல்லியிருக்கிறார்.

இதனால் நயன் தாரா அன்று எனக்கு ஷூட் இல்லை நான் கிளாப் பிடிக்கிறேன் என்று உதவி இயக்குனர் வேலையை செய்திருக்கிறார்.அந்த சமயத்தில் ஷூட் நடக்கும் போது பலர் பேசிக்கொண்டிருக்கும் போது டென்சனான நயன் கத்தி கூச்சலிட்டு சைலெண்ட் என்று கத்தியுள்ளார்.

Similar Posts