சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுக்கும் நடிகை நஸ்ரியா. | Actress Nazriya takes a break from social media.
நடிகை நஸ்ரியா தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர்.

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்த அவர், சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
