திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் –நடிகை நிவேதா பெத்துராஜ்(Actress Nivetha Pethuraj)

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பிரபல நடிகையாவார்
நடிகையாவதற்கு முன்பு
நிவேதா பெத்துராஜ் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிள் நடித்து வருகிறார் நவம்பர் 30 1990 தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார் அவர் 11 வயதில் தனது பெற்றோருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு குடிபெயர்ந்து கிரசன்ட் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

திரைப்பயணம்

இது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படமாகும் இதில் தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ், அபினவ் மற்றும் ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மூன்று பெண்கள் தங்கள் திருமணத்தில் எதிர்கொள்கின்ற வேவ்வேறு சவால்களை பற்றி இந்த படம் அமைந்திருக்கும்.
பொதுவாக என் மனசு தங்கம்

தளபதி பிரபு இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும் இதில் உதயநிதி ஸ்டாலின், மற்றும் நிவேதா பெத்துராஜ், பார்த்தீபன் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.
தன்னுடைய கிராமத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு இளைஞனை அதிக செல்வாக்கு உள்ள ஒருவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கிறான் அதையடுத்து எவ்வாறு ஹீரோ தனது கிராமத்தை மேம்படுத்துகிறான் என்பதை பற்றி கதை நகரும்.
மென்டல் மதிலோ

இது விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தெலுங்கு காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும் இதில் ஸ்ரீ விஷ்ணு, நிவேதா பெத்துராஜ், அம்ருதா சீனிவாசன்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஹீரோ முடிவெடுக்க முடியாமல் திணருகிறார் இறுதியில் அவர் யாரை தேர்ந்தேடுக்கிறார் என்பதை பற்றி கதை நகரும்.
டிக் டிக் டிக்

இது சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அறிவியல் புணைகதை திரில்லர் திரைப்படம் ஆகும் இதில் ஜெயம் ரவி, ஆரோன் அஜீஸ் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் இது 1998 ஆம் ஆண்டு வெளிவந்த அர்மகெதோன்(Armageddon) எனப்படும் படத்திலிருந்து எடுக்கப்பட்டது இது ₹57.63 கோடிக்கு மேல் வசூலித்தது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
ஒரு நகரத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் சில நாட்களில் பூமியை தாக்கபோவதை கண்டறிந்த பிறகு அதை எப்படியாவது திசை திருப்ப அல்லது அழிப்பதற்கு ஒரு குழுவை இந்தியா நியமிக்கிறது அவர்கள் எப்படி அந்த கோளை பூமிக்கு வராமல் தடுக்கிறார்கள் என்பதை பற்றி கதை நகரும்.
திமிரு புடிச்சவன்

இது கணேசா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி திரைப்படமாகும் இந்தபடத்தில் விஜய் அண்டனி, நிவேதா பெத்துராஜ், மற்றும் சாய் தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரிமினல் பலரின் எதிர்ப்புகளை மீறி ஒரு போலீஸ்காரர் ஒரு நகரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் அவர் எவ்வாறு கிரிமினல்களை அழித்து நகரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பற்றி கதை நகரும்.
பார்ட்டி

இது வெங்கட் பிரபு இயக்கதில் சிவா தயாரிப்பில் வெளிவராத இந்திய நகைச்சுவை திரில்லர் திரைப்படமாகும் இதில் ஜெய், ஜெயராம், சிவா, ஷாம், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன்,மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் சஞசிதா ஷெட்டி,நிவேதா பெத்துராஜ்,நந்தா துரைராஜ்,நாசர் மற்றும் சந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
சித்ரலஹரி

கிஷோர் திருமலா இயக்கத்தில் 12 ஏப்ரல் 2019 அன்று வெளியாகிய இந்திய தெழுங்கு மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும் இதில் சாய் தரம் தேஜ், கல்யாணி பிரியதர்ஷன், நிவேதா பெத்துராஜ், சுனில், வெண்ணெலா, கிஷோர், போசானி கிருஷ்ணா முரளி, பிரம்மாஜி ஆகிய பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
துரதிர்ஷ்டவசமான மற்றும் அவரது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையில் தொடர்ச்சியாக தோல்விகளை கண்டு சோர்வடைந்த ஹீரோ தனது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறார்.
ப்ரோச்சேவரேவருரா

ப்ரோச்செவரேவருரா 28 ஜூன் 2019 வெளியாகிய இத்திரைப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு, நிவேதா தாமஸ்,நிவேதா பெத்துராஜ் மற்றும் சத்யதேவ் காஞ்சரனா,ஆகியோர் நடித்துள்ளனர், பிரியதர்ஷி மற்றும் ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் விவேக் சாகர் இசையமைத்துள்ளார் இதற்கு ஒளிப்பதிவு படத்தொகுப்பு சாய் ஸ்ரீ ராம் மற்றும் ரவி தேஜா கிரிஜாலா ஆகியோர் செய்திருந்தனர்.
மூன்று இடைநிலை மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒன்றாக இணைக்க முடியாததால் தன் தந்தையை பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு உதவ ஒரு திட்டத்தை தீட்டி சிக்கலில் மாட்டி கொள்கிறார்கள்.
சங்கத்தமிழன்

விஜய் சந்தர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும் இதில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ரவி கிஷன் மற்றும் அசுதோஷ் ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாசுபாடு தொடர்பிலான கவலைகள் காரணமாக ஒரு தாமிர ஆலையை கட்டும் திட்டத்திற்கு எதிராக ஒரு கிராமம் எதிர்ப்பை தெரிவிக்கின்றது, ஆனால் அவர்களின் தலைவர் இறந்தவுடன், ஆலைக்கு பின்னால் உள்ள நிறுவனம் அவர்களின் திட்டத்தை எளிதாக்க ஒரு தோற்றத்தை அனுப்புகிறது.
ஆலா வைகுந்தபுரமுலோ

இது திரிவி க்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தெலுங்கு ஆக்ஷன் திரைப்படமாகும் இதில் அல்லு அர்ஜீன் மற்றும் பூஜா ஹெக்டெ, தபு,ஜெயராம்,சுஷாந்த், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தந்தையின் புறக்கணிப்பு மற்றும் விமர்சனங்களை அனுபவித்து வருகின்ற ஹீரோ தான் ஒரு கோடீஸ்வரனின் மகன் தான் பிறந்தவுடன் மாற்றப்பட்டதை அறிந்தவுடன் அவனுடைய வாழ்க்கை மாறுகிறது.
ரெட்

இது கிஷோர் திருமலா இயக்கத்தில் 2021 வெளிவந்த இது இந்திய தெலுங்கு க்ரைம் திரில்லர் திரைப்படமாகும் இதில் ராம் பொதினேனி இரட்டைவேடத்தில் நடித்துள்ளார் மற்றும் இதில் நிவேதா பெத்துராஜ், மாளவிகா சர்மா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
வினோதமான விவரங்கள் கிடைக்கும் வரை ஒரு கொலை விசாரனையில் சரியான நபரைக் கைது செய்ததாக போலிஸார் நினைக்கிறார்கள் இறுதியில் யார் கொலையாலி என்று கண்டுபிடிக்கிறார்களா என்று கதை பரபரப்பாக நகரும்.
பாகல்

இது அறிமுக நடிகர் நரேஷ் குப்பிலி இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு காதல் நகைச்சுவை திரைப்படமாகும் இதில் விஷ்வக் சென், நிவேதா பெத்துராஜ், பூமிகா சாவ்லா மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிள் நடித்துள்ளனர்.
ஹீரோ தன்னுடைய தாயின் மரணத்திற்கு பிறகு காதலிப்பதற்கு ஒரு பெண்னை தீவிரமாக தேடுகிறார்.
பொன் மாணிக்கவேல்

இது பொன் மாணிக்கவேல் கந்தேன் புகழ் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும் இதில் பிரபுதேவா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னையில் இருக்கும் ஒரு காவல் துறையைப் பின்தொடர்ந்து குற்றதின் கொடூரத்தால் திகைத்து நிற்கிறார்கள் அவர்களுக்கு உதவக்கூடிய காவலராக கைவிட்ட ஒருவராக ஹீரோ அறிமுகம் செய்யப்படுகிறார்.
ப்ளடி மேரி

இது சந்து மொண்டெட்டி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தெலுங்கு க்கிரைம் திரைப்படமாகும் இதில் நிவேதா பெத்துராஜ், பிரம்மாஜி, அஜய், கிரீட்டி தாமராஜீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிள் நடித்துள்ளனர்.
மூன்று அனாதை குழந்தை பருவ நண்பர்களான மேரி, ராஜீ மற்றும் பாஷா ஆகிய மூவரும் ஒரு கொலை வழக்கில் மாட்டியுள்ளனர் அதில் இருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்ற வகையில் கதை நகரும்.
விரத பர்வம்

வேணு உடுகுலா இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு காதல் அதிரடி திரைப்படமாகும் இதில் சாய் பல்லவி மற்றும் ராணா டக்குபதி நடித்துள்ளனர்,பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஜரீனா வஹாப், ஈஸ்வரி ராவ் மற்றும் சாய் சந்த், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்
ஒரு துரோகி போர்வீரன் ஒரு கொடிய படையின் கவிதைகளால் கவரப்படுகிறான் ஆனால் ஒரு இளம் பெண் ஒரு புரட்சி படையினை ஆழமாக பின்தொடர்கிறாள் இவர்கள் இருவரையும் பற்றி கதை நகரும்.
வரவிருக்கும் படங்கள்

விஷ்வக் சென் இயக்கத்தில் 17 பிப்ரவரி 2023 வெளியாகவுள்ள தாஸ் கா தம்கி ஒரு நகைச்சுவை திரில்லர் திரைப்படமாகும் மற்றும் இப்படத்தில் விஷ்வக் சென்,நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிள் நடிக்கின்றனர்.
விருதுகள்

2018 மென்டல் மதிலோ 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்காக சிறந்த அறிமுக நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார்.
2021 சித்ரலஹரி 9வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்காக சிறந்த துணை நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார்.